யோக பயிற்சிக்கான நேரம் - yoga payirchi nream in tamil

யோகப் பயிற்சிக்கு உரிய நேரம் 

யோக பயிற்சிக்கான நேரம் - yoga payirchi nream in tamil

24 நிமிடங்கள் என்பது ஒரு நாழிகை ஆகின்றது ,
2 ½ நாழிகை என்பது 1 மணி நேரம் .

நாளொன்றுக்கு 10 ஜாமம் .
5 ஜாமம் என்பது 12 மணி நேரமாகும் .
10 ஜாமம் என்பது 24 மணி நேரமாகும்

அப்படி என்றால் 24 மணியை ஜாமங்களாக பிரிக்கையில் 2 மணி 24 நிமிடங்கள் என்பது ஒரு ஜாமம் என்றாகின்றது.

முப்பது நாழிகைகளை 6 + 6 ஆக பிரித்தால் 5 ஆக பிரிக்கலாம்
பகற் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.
இராக் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.


இதில் பகல் முப்பது நாழிகையில், பூமியை ……..

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை (6.00-8.24) ஆகாயமும்
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48) காற்றும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை (10.48-1.12) நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை (1.12-3.36) நீரும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை (3.36-6.00) நிலமும் ஆளுகின்றன.


இதில் இரவு முப்பது நாழிகையில், பூமியை


6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை (6.00-8.24) நிலமும்
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48) நீரும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை (10.48-1.12) நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை (1.12-3.36) காற்றும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை (3.36-6.00) ஆகாயமும் ஆளுகின்றன.

இதில் கதிரவன் உதயத்திற்கு முன் 6 நாழிகையும்

(*சுமாராக காலை 3-30 மணி முதல் 6.00 மணி வரையிலும்)
பின் 6 நாழிகையும் (*சுமாராக காலை 6-00 மணி முதல் 8.24 மணி வரையிலும்)
உள்ள காலமே யோகப் பயிற்சிக்கு உகந்ததாக ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் அருளுகின்றார்.

*(தினசரி சூரிய உதயம் கணித்து இந்த நேரத்தை முறையாக தேர்ந்தெடுக்கலாம்.)

திருமூலர் 3 ம் தந்திரம் , 16 வார சரத்தில்,
திங்கள் , புதன் , வெள்ளியில் மூச்சை இடைநாடி வழியாகவும் ,
செவ்வாய் , சனி , ஞாயிறில் மூச்சை வலது நாடி வழியாகவும் ,
வளர்பிறை வியாழனில் மூச்சு இடை நாடியிலும்,
தேய்பிறை வியாழனில் மூச்சு வலது நாடியிலும் பயில வேண்டும் என்கிறார்.

மேலும் காலையில் யோகம் பயில கபம் நீங்கும்,

நண்பகல் யோகம் பயில கொடிய வாத நோய்கள் தீரும்,
விடியற்காலையில் யோகம் பயில பித்த நோய்கள் அகலும் என்கிறார்.
காற்றினை உள்ளுக்கு இழுப்பது “ பூரகம்” எனப்படுகிறது ,
காற்றினை வெளி விடல் “ ரேசகம் “ எனப்படுகிறது,
காற்றினை உள் நிறுத்துதல் “ கும்பகம் “ எனப்படுகிறது.

• 16 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
• 64 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
• 32 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் பிராணாயாமம் எனப்படுகின்றது

இந்த முறைக்கு மாறாக வலப்பக்கம் காற்றினை உள்வாங்கி பயிலுதல் “வஞ்சனை” எனப்படும்.
இடைகலை வழியாக 16 மாத்திரை கால அளவு பூரகம் செய்து ,
பிங்கலையில் 32 மாத்திரை கால அளவு இரேசகம் செய்து மீண்டும்
காற்றினை உள்வாங்காமல் 64 மாத்திரை கால அளவு வெளி கும்பகம் செய்ய பல உண்மைகள் தெரியுமாம்.

மாத்திரை கால அளவு என்பது கண் இமைப்போது அல்லது கைந் நொடிப்பொழுது எனப்படுகிறது .இந்த முறைகள் நன்கு தேர்ந்தவர்களாலேயே செய்யமுடியும். மேலும் இவைகளை எல்லாம் தேர்ந்த குருமூலமாகவே பயில வேண்டும். ஆரம்ப நிலையில் பயில்பவர்கள் , இதனை

• 6 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
• 24 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
• 12 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் சாத்தியமாகின்றது என்றறிகிறோம் .

எப்படி என்றாலும் நன்றாக தேர்ந்த குருவின் துணை அவசியமாகின்றது . குருவின் துணையின்றி முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடது நாசியை எப்படி மூடி வலது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , கும்பகம் என்பதனை எப்படி செய்வது என்பதையும் , வலது நாசியை எப்படி மூடி இடது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , வெளி கும்பகம் எவ்வாறு செய்வது என்பதனையும் குருவின் அருகாமையில்தான் செய்ய வேண்டும் .

ஏனென்றால் குருவின் துணையின்றி இந்த பயிற்சியில் ஈடுபட்டு தோல்வி காண்பது மட்டுமல்ல , உடல் தொந்திரவுகளும் ஏற்படுவதுண்டு . ( தொந்தி , அடிக்கடி ஏப்பம் , அடிக்கடி அபானன் பிரிதல், சித்த சுவாதீனம் , பார்வை குறைபாடு போன்றவைகள் )

முறையாக பயிற்சியை பயின்றால் இதனுடைய பலன்கள் சொல்லில் அடங்காதது.

காரணம் , மனித முயற்சியினால் செய்ய முடியாத பலவிதமான சாதனைகளையும், சாகசங்களையும் நேர்த்தியாக செய்து முடிக்கலாம் ,ஆனால் பயில்வோரின் மனதில் முழுக்க முழுக்க தன்னலம் கருதாமையும் , மக்கள் நலனும் , உலக நன்மையை கருதும் மனோபாவமும் இருப்பது அவசியமாகும் .

மந்திரவாசல்
Mandhiravasal

கருத்துரையிடுக

0 கருத்துகள்