ஆக்ருஷ்ணம் மந்திரம் சித்தி
Akrushana Mandhira siddhi
உகந்த கிழமை : வெள்ளி
வஸ்திரம் : சாதாரண பட்டு,
திசை : மேற்கு நோக்கி
பலகை : செண்பக மர பலகை
திரி : வெள்ளெருக்கு நார்,
எண்ணை : ஏரண்டத்தெண்ணை
மாலை : சங்குமணி
வினாயகர் வழிபாடு
மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.
நல்ல வெள்ளி கிழமை நாளன்று சாதாரண பட்டு உடை உடடுத்தி மேற்கு திசை நோக்கி செண்பக மர பலகையில் அமர்ந்து, வெள்ளெருக்கு நார் திரி செய்து ஏரண்டத்தெண்ணை தீபம் ஏற்றி வசியநம என்ற மந்திரத்தை லட்சத்தி எட்டு உரு சொல்லி பூஜை செய்ய ஆகர்ஷனம் சித்திக்கும்.ஆகர்ஷனம் மந்திரம் சித்தி செய்தல்
மந்திர உரு செய்யும் போது மேற்குறிப்பிட்ட முறைகளின் படி செய்தல் அவசியம். உடலின் எந்த பாகமும் தரையில் இருக்க கூடாது, மந்திரம் மனதிற்குள் உச்சரிப்பது நலம், மனம், சிந்தனை, என்ன அலைகள் எல்லாம் வசியநம மந்திரத்தை நோக்கியே இருக்க வேண்டும். மந்திர எண்ணிக்கைக்கு 108 எண்ணிக்கை உடைய சங்குமணி மாலை பயன்படுத்தவும்.
ஆகர்ஷனம் மந்திர பயன்
ஆகர்ஷனம் என்றால் தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள் , மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும் , அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.
மந்திரவாசல்
Mandhiravasal
2 கருத்துகள்
சிவசிவ
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா
பதிலளிநீக்கு