தம்பன மந்திரம் சித்தி செய்யும் முறை - Thampana manthiram siddhi seium murai

தம்பன மந்திரம்

Thampana Manthiram

தம்பன மந்திரம் சித்தி செய்யும் முறை - Thampana manthira நமசிவயm siddhi seium murai

தம்பனம் மந்திரம் : நமசிவய
உகந்த கிழமை : புதன்
ஆடை : சாதாரண பட்டு
திசை : தென்மேற்கு
ஆசனம் : ஆல மர பலகை
திரி : எவ்விதமான திரியும் ,
தீபம் : ஆதளைக் கொட்டை எண்ணை
மாலை : தாமரை விதை

வினாயகர் வழிபாடு


மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.


தம்பன மந்திர சித்தி செய்முறை

தம்பன மந்திரத்திற்கு ஏற்ற நாளான புதன் கிழமை சாதாரண பட்டு ஆடை அணிந்து தென்மேற்கு திசை நோக்கி ஆல மர பலகையில் அமர்ந்து , தாமரை, பருத்தி, இது போன்று ஏதாவது ஒரு திரியில் ஆதளைக் கொட்டை எண்ணையால் தீபம் ஏற்றி நமசிவய என்ற மந்திரத்தை லட்சத்தி எட்டு உரு சொல்லி பூஜை செய்ய தம்பனம் மந்திரம் சித்திக்கும் .

மந்திர உரு செய்யும் போது மேற்குறிப்பிட்ட முறைகளின் படி செய்தல் அவசியம். உடலின் எந்த பாகமும் தரையில் இருக்க கூடாது, மந்திரம் மனதிற்குள் உச்சரிப்பது நலம், மனம், சிந்தனை, என்ன அலைகள் எல்லாம்  நமசிவய மந்திரத்தை நோக்கியே இருக்க வேண்டும். மந்திர எண்ணிக்கைக்கு 108 எண்ணிக்கை உடைய தாமரை விதையால் செய்த மாலை பயன்படுத்தவும்.

தம்பன மந்திர பயன்

தம்பனம் என்றால் ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்வது, பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார் கருவூரார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாம்.

மந்திரவாசல்
Mandhiravasal

கருத்துரையிடுக

0 கருத்துகள்